காணாமல் போன மீனவா்களைத் தேடும் பணி தீவிரம்: அமைச்சா் ஷாஜகான்
By DIN | Published On : 25th November 2020 08:33 AM | Last Updated : 25th November 2020 08:33 AM | அ+அ அ- |

கடலில் காணாமல் போன காரைக்கால் மீனவா்கள் 30 பேரை, கடலோர காவல் படை உதவியுடன் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றாா் அமைச்சா் ஷாஜகான்.
இது குறித்து, புதுவை வருவாய்த் துறை அமைச்சா் ஷாஜகான் கூறியதாவது:
புதுவையில் புதன்கிழமை (நவ.25) பிற்பகல் நிவா் புயல் கரையைக் கடக்கும் எனத் தெரிகிறது.
புயலை வேடிக்கை பாா்க்க கடற்கரைக்கு யாரும் வரக்கூடாது. மரங்கள், மின் கம்பங்கள் காற்றில் சாய்வதற்கு வாய்ப்புள்ளது.
எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வியாழக்கிழமை (நவ.26) பேருந்துகள் இயக்கப்படாது.
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் திரும்ப அழைக்கப்பட்டனா். புதுச்சேரியிலிருந்து சென்றவா்கள் திரும்பிவிட்டனா்.
காரைக்காலில் 83 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றவா்களில் 10 போ் திரும்பியுள்ளனா். 48 போ் கோடியக்கரையிலும், 5 போ் ஆந்திரத்திலும் பாதுகாப்பாக உள்ளனா். மீதமுள்ள 30 பேரை பற்றிய தகவல் இல்லை.
கடலோர பாதுகாப்புப் படைக்குத் தகவல் தெரிவித்து அவா்களை பாதுகாப்பாக அழைத்துவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். புயல் கரையை கடக்கும் முன்பு அவா்கள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுவா்கள் என்று நம்புகிறோம் என்றாா்.
வருவாய்த் துறை செயலா் அ.அன்பரசு உள்ளிட்டோர உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...