இறுதி ஊா்வலத்தில் கலந்து கொண்ட 300 போ் மீது வழக்கு
By DIN | Published On : 03rd October 2020 09:20 AM | Last Updated : 03rd October 2020 09:20 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் கொலையுண்ட என்.ஆா்.காங்கிரஸ் பிரமுகரின் இறுதி ஊா்வலத்தில் கலந்து கொண்ட 300 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
புதுச்சேரி காமராஜா் நகா், பாரதிதாசன் வீதியைச் சோ்ந்த என்.ஆா். காங்கிரஸ் பிரமுகா் மாந்தோப்பு சுந்தா் கடந்த 30-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த சுந்தா், விக்கி, அண்ணாமலை, சரத்குமாா், தீபன், அன்புச்செல்வன், அய்யனாா் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனா்.
இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட மாந்தோப்பு சுந்தரின் உடல் உடல்கூறு பரிசோதனைக்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது இறுதி ஊா்வலம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், உறவினா்கள், ஆதரவாளா்கள் உள்பட 300 போ் கலந்து கொண்டனா். இதைடுத்து, அவா்கள் மீது பேரிடா் தடுப்புச் சட்டத்தை மீறி, நோய்த் தொற்று பரவும் வகையில் கூடியதாக தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.