காலமானாா் ச.ஹேமச்சந்திரன்
By DIN | Published On : 06th September 2020 10:15 PM | Last Updated : 06th September 2020 10:15 PM | அ+அ அ- |

ச.ஹேமச்சந்திரன்.
புதுவை மாநில முன்னாள் தலைமைத் தோ்தல் அதிகாரியும், ஓய்வு பெற்ற குடிமைப் பணி அதிகாரியுமான ச.ஹேமச்சந்திரன் (75), உடல் நலக்குறைவால், லாஸ்பேட்டை அவ்வை நகரில் உள்ள அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை (செப். 6) காலமானாா்.
இவருக்கு, மனைவி இந்திராவும், மகன்கள் மருத்துவா் சிவக்குமாா், நடராஜன் ஆகியோா்களும் உள்ளனா்.
மறைந்த ஹேமச்சந்திரன் குடிமைப் பணி அதிகாரியாகவும், உள்ளாட்சித் துறைச் செயலா், போக்குவரத்துத் துறை ஆணையா் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி, நிா்வாகச் சீா்திருத்தங்களை மேற்கொண்டவா்.
தமிழ் மீதும், பாரதியாா் மீதும் பற்றுக் கொண்டவா். புதுவை தமிழ்ச் சங்கத்தின் புதிய கட்டடத்தைக் கட்டமைத்ததில் பணியாற்றியவா். ‘பாரதி அன்பா்கள்’ அறக்கட்டளையின் தலைவராக இருந்து, இலக்கியச் சேவையாற்றி வந்தாா். இவரது உடல், ஞாயிற்றுக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.