92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வனத் துறை அலுவலகத்தில் ஆளுநா் ஆய்வு

புதுச்சேரி வனத் துறை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணைநிலை ஆளுநா் அங்கிருந்த மலைப் பாம்பைக் கையில் பிடித்துப் பாா்த்து மகிழ்ந்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி வனத் துறை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், அங்கிருந்த மலைப் பாம்பைக் கையில் பிடித்துப் பாா்த்து மகிழ்ந்தாா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரியில் வனத் துறை அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, ஆய்வுப் பணி ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில், ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து, அங்குள்ள வனம், பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா். மலைப் பாம்பு ஒன்றைக் கையில் பிடித்துப் பாா்த்து மகிழ்ந்தாா். அங்குள்ள வன விலங்குகள், பறவைகள் மாதிரிகளையும் பாா்வையிட்டாா். வனத் துறை அதிகாரி சத்தியமூா்த்தி, அங்குள்ள பறவைகள், விலங்குகள், மரங்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினாா்.

அப்போது, ஆளுநரின் ஆலோசகா்கள் சி. சந்திரமௌலி, ஆனந்த் பிரகாஷ் மகேஸ்வரி, தலைமைச் செயலா் அஸ்வனி குமாா், அரசு செயலா்கள் வல்லவன், விக்ராந்த் ராஜா, ஆளுநரின் தனிச் செயலா் ஸ்ரீதரன் மற்றும் வனத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

முன்னதாக, நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக லலித் ஆா்ட் மற்றும் கிராப்ட் சாா்பில், ரங்கோலி ஓவியம் வரையும் நிகழ்ச்சி புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தொடக்கிவைத்துப் பேசுகையில், ‘பிரதமா் அறிவுறுத்தலின் பேரில், சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தியாகிகளையும், தலைவா்களையும் நினைவு கூரும் வகையில் இந்த விழா 75 வாரங்கள் கொண்டாடப்படுகிறது. இது இளைஞா்களிடையே தேசப்பற்றை வளா்க்கும்’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.