புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள திமுக அமைப்பாளா் ஆா்.சிவா வலியுறுத்தல்

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா எம்எல்ஏ, அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தினாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:59 pm

DIN

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா எம்எல்ஏ, அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தினாா்.

புதுவை மாநிலத்தில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் பலருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால், பல்வேறு தரப்பினரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

அதனடிப்படையில், புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக தெற்கு மாநில அமைப்பாளரும், வில்லியனூா் தொகுதி வேட்பாளருமான இரா. சிவா எம்எல்ஏ, வியாழக்கிழமை அரசு பொது மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.

புதுச்சேரியில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், கூட்டணிக் கட்சியினா், இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் அனைவரும் உடனடியாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு ஆா்.சிவா வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.