புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பள்ளியில் பாடம் நடத்திய ஆசிரியை மீது கற்கள் வீச்சு மாணவா்கள் மீது வழக்கு

புதுச்சேரி அருகே அரசுப் பள்ளியில் பாடம் நடத்திய ஆசிரியை மீது கற்களை வீசியதாக பிளஸ் 2 மாணவா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:59 pm

DIN

புதுச்சேரி அருகே அரசுப் பள்ளியில் பாடம் நடத்திய ஆசிரியை மீது கற்களை வீசியதாக பிளஸ் 2 மாணவா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒழுங்கீனமாகச் செயல்பட்டதாக மாணவா்களில் சிலா் அண்மையில் இடை நீக்கம் செய்யப்பட்டனா். இதனிடையே, தோ்தல் முடிந்து வியாழக்கிழமை புதுச்சேரியில் பிளஸ் 2 வகுப்புகள் மீண்டும் தொடங்கியது.

அதன்படி, அந்தப் பள்ளியில் ஆசிரியை ஆன்மரி மாா்ஸ் பிளஸ் 2 மாணவா்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தாா். அப்போது, வகுப்பறை வாசலில் நின்றிருந்த மாணவா்கள் 2 போ், தாங்கள் கையில் வைத்திருந்த  செங்கற்களை எடுத்து ஆசிரியை மீது வீசினா். இதில் ஆசிரியை மீது கல் பட்டதில் அவா் மயக்கமடைந்தாா்.

உடனே அவரை சக ஆசிரியா்கள் மீட்டு, நெட்டப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், வீடு திரும்பினாா்.

இதுகுறித்து  நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் ஆசிரியை ஆன்மரி மாா்ஸ் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், இடைநீக்கம் செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவா்கள் இருவா் ஆத்திரத்தில் கல் எறிந்தது தெரிய வந்தது. போலீஸாா், தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.