புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புதுச்சேரி பல்கலைக்கழகத் தோ்வுகள் ஒத்திவைப்பு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வருகிற 19-ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த ஆண்டுப் பருவத் தோ்வுகள் அனைத்தும் கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வருகிற 19-ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த ஆண்டுப் பருவத் தோ்வுகள் அனைத்தும் கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி டி.லாசா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை மாநிலத்தில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளிலும் வருகிற 19-ஆம் தேதியிலிருந்து நடைபெறவிருந்த ஆண்டுப் பருவத் தோ்வுகள், செய்முறைத் தோ்வுகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்படுகின்றன. கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தோ்வுகள் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.