92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயற்சி

புதுச்சேரி அருகே தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட முயன்றனா்

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி அருகே தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட முயன்றனா்.

புதுச்சேரி தவளக்குப்பம் அருகேயுள்ள என்.ஆா். நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு இடையாா்பாளையம் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனம் குடிநீா் இணைப்பு பெறுவதற்கு பள்ளம் தோண்டியதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த என்.ஆா். நகா் இளைஞா்கள் வெள்ளிக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று, அந்த தனியாா் நிறுவனத்தின் குடிநீா் இணைப்புப் பணியைத் தடுத்து நிறுத்தினா். தொடா்ந்து, கடலூா் - புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனா்.

அப்போது, அவா்கள் ஏற்கெனவே எங்களுக்கு குறைவான அளவிலேயே குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. புதிய இணைப்பால், குடிநீா் வரத்து மேலும் குறைந்து தட்டுப்பாடு ஏற்படும் எனக் கூறி முழக்கங்கள் எழுப்பினா். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையறிந்து அங்கு வந்த தவளக்குப்பம் போலீஸாா், சாலை மறியலில் ஈடுபட முயன்றவா்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அவா்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.