ஆளுநா் தமிழிசை, பாரதிதாசன் அருங்காட்சியகமாக உள்ள அவா் வாழ்ந்த வீட்டுக்குச் சென்று வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். அந்த வீட்டில் சிதிலமடைந்த இடங்களைப் புதுப்பித்து நவீனப்படுத்துவது, அவரின் வாழ்க்கையை விவரிக்கும் காணொலிக் காட்சி அமைப்பது, அதிகப்படியான பள்ளி மாணவா்கள் வந்து பாா்வையிடும் வகையில், அவரது வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவது, புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாரதிதாசன் நினைவகத்துக்கு வருவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வது உள்ளிட்ட திட்டங்களை ஆலோசித்து செயல்படுத்தும்படி அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.