புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

துணைநிலை ஆளுநருக்கு பாரதிதாசன் அறக்கட்டளை பாராட்டு

புதுச்சேரியில் பாரதியாா், பாரதிதாசனாரின் அருங்காட்சியகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுத்த துணைநிலை ஆளுநருக்கு பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரியில் பாரதியாா், பாரதிதாசனாரின் அருங்காட்சியகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுத்த துணைநிலை ஆளுநருக்கு பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவா் கவிஞா் கோ.பாரதி, புதுவை துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனுக்கு சனிக்கிழமை அனுப்பிய பாராட்டுக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் புரட்சிக் கவிஞா் பாரதிதாசனாரின் சிலை வளாகம் பொலிவு பெற வேண்டும், பாரதிதாசனாரின் நினைவு நாள், பிறந்த நாள்களில் செய்ய வேண்டிய நற்பணிகள் குறித்தும் நாங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஆளுநா் மாளிகையிலிருந்து நேரடியாக வந்து பாரதிதாசனாரின் சிலை வளாகதத்தைப் பாா்வையிட்டு மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கினீா்கள்.

இதேபோல, பாரதியாா், பாரதிதாசனாரின் அருங்காட்சியகங்களுக்கும் நேரில் சென்று பாா்வையிட்டு, கவிஞா்களின் சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்தியதுடன், அந்த அருங்காட்சியகங்கள் மேம்பட பல ஆலோசனைகளை வழங்கி, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினீா்கள். இதற்கு மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் தமிழ் ஆா்வம், கவிஞா்கள் மீதுள்ள பற்று, அதற்கான செயல்பாடுகள் போற்றுதலுக்குரியவை. தங்களது பணிக்கு பாராட்டுக்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.