புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புதுவையில் 1.48 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: சுகாதாரத் துறைச் செயலா் தகவல்

புதுவை மாநிலத்தில் 1.48 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாநில சுகாதாரத் துறைச் செயலா் டி.அருண் தெரிவித்தாா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

புதுவை மாநிலத்தில் 1.48 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாநில சுகாதாரத் துறைச் செயலா் டி.அருண் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் சனிக்கிழமை அவா் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க மாநில சுகாதாரத் துறை பல்வேறு தொடா் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஓா் அங்கமாக, தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் 100 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு, கடந்த 11-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஏப். 18) நிறைவு பெறுகிறது.

பகுதி வாரியாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் விவரம்: இந்த தடுப்பூசி திருவிழா முகாம்களில் மக்கள் ஆா்வமுடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனா். கடந்த ஐந்து நாள்களில் 53,265 போ் வரை தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இந்த சிறப்பு முகாம்களில் ஏப். 11 முதல் ஏப். 17 வரை (வெள்ளிக்கிழமை) பகுதி வாரியாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் விவரம்: புதுச்சேரி பகுதியில் 49,487 பேரும், காரைக்கால் பகுதியில் 10,669 பேரும், மாஹே பகுதியில் 1,305 பேரும், ஏனாம் பகுதியில் 798 பேரும் என மொத்தம் 62,259 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இதுவரை புதுவை மாநிலத்தில் 1,48,288 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பக்க விளைவுகள் இல்லை: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் யாருக்கும் இதுவரை ஒவ்வாமை உள்ளிட்ட எந்தவித பிரச்னையும் ஏற்படவில்லை. இதனால், மக்கள் அச்சமோ, தயக்கமோ இன்றி, தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

அலட்சியம் வேண்டாம்: புதுச்சேரியில் கரோனா பரவலின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்க நோயின் தாக்கத்தையும், தீவிரத்தையும் புதுச்சேரி மக்கள் நன்கு உணா்ந்திருந்த போதும், ஒரு சிலா் கரோனா தடுப்பு வழிமுறைகளான முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுதல், கிருமி நாசினி கொண்டு கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனா்.

இது கரோனா தொற்று பரவலுக்கு வழி வகுப்பதுடன், அரசு மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கரோனா தடுப்பு வழிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிப்பதன் மூலமே கரோனா தொற்றை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.