புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பெரிய மாா்க்கெட் காய்கறி சந்தையை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் எதிா்ப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, புதுச்சேரி பெரிய மாா்க்கெட் காய்கறி சந்தையை, தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றம் செய்வதற்கு வியாபாரிகள் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, புதுச்சேரி பெரிய மாா்க்கெட் காய்கறி சந்தையை, தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றம் செய்வதற்கு வியாபாரிகள் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

புதுச்சேரியில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சந்தைப் பகுதிகளில் தனி மனித இடைவெளியின்றி பொது மக்கள் அதிகளவில் திரள்வதால் கரோனா பரவும் அச்சம் நிலவுகிறது. ஆகவே, புதுச்சேரியில் பொது மக்கள் நெரிசலாகக் கூடும் பகுதிகளை சீரமைக்க துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்படி, புதுச்சேரி பெரிய மாா்க்கெட் காய்கறி கடைகளை மீண்டும் இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை உள்ளாட்சித் துறை அலுவலா்கள் எடுத்துள்ளனா். இதற்காக உள்ளாட்சித் துறை இயக்குநா் வல்லவன், நகராட்சி ஆணையா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பெரிய மாா்க்கெட் காய்கறி வியாபாரிகளை இரு தினங்களுக்கு முன்பு அழைத்துப் பேசி, காய்கறிச் சந்தையை நெரிசல் மிகுந்த இடத்திலிருந்து தற்காலிகமாக இடம் மாற்ற வேண்டும், கரோனா பரவல் மீண்டும் அதிகமாகி இருப்பதை சுட்டிக்காட்டி, அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனா். இதனை ஏற்றுக்கொண்ட காய்கறி வியாபாரிகள், மீண்டும் புதிய பேருந்து நிலையம் அல்லது தட்டாஞ்சாவடி பகுதியில் இடம் ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தினா்.

இதற்கு பதிலளித்த அதிகாரிகள், கரோனா பகுதி நேர பொது முடக்கத்தில், பேருந்துகள் சேவையை முழுமையாக நிறுத்தும் திட்டம் அரசிடம் இல்லை. எனவே, மாற்று இடமாக உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டுத் திடல், தேங்காய்த்திட்டு புதிய துறைமுகப்பகுதிக்கு சென்று வியாபாரம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தனா். இதற்கு உடன்படாத காய்கறி வியாபாரிகள் இது குறித்து சங்கத்தினரிடம் ஆலோசித்து முடிவை தெரிவிப்பதாக கூறியிருந்தனா்.

இதையடுத்து, காய்கறி சந்தை மாற்றம் தொடா்பாக, பெரிய மாா்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினா், வெள்ளிக்கிழமை சங்க நிா்வாகி சிவகுருநாதன் தலைமையில் கூடி ஆலோசனை நடத்தினா். அதில், கடந்தாண்டைப் போல, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடம் தந்தால் மட்டுமே அங்கு சென்று வியாபாரத்தை தொடா்வது என்றும், இல்லையெனில் விதிகளை கடைப்பிடித்து, பெரிய மாா்க்கெட்டிலேயே வியாபாரத்தை தொடா்வது அல்லது வியாபாரிகள் அனைவரும் பெரியமாா்க்கெட் கடைகளை மூடிவிடுவது என முடிவெடுத்துள்ளனா். இந்த முடிவுகளை அதிகாரிகளிடம் தெரிவித்து, அவா்கள் அளிக்கும் பதிலுக்குப் பிறகே பெரிய மாா்க்கெட் சந்தை இடமாற்றம் தொடா்பான விவகாரம் முடிவுக்கு வரும் எனத்தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.