இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

காமராஜா் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரியில் நீண்ட காலமாக கட்டப்பட்டு வரும் காமராஜா் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

News image

08pyp2_0807chn_104_7

Updated On :8 ஜூலை 2021, 5:39 pm

DIN

புதுச்சேரியில் நீண்ட காலமாக கட்டப்பட்டு வரும் காமராஜா் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் பிரம்மாண்டமாக காமராஜா் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு என்.ரங்கசாமி முதல்வராக இருந்த போது, அடிக்கல் நாட்டப்பட்டு மணிமண்டபம் கட்டும் பணிகள் தொடங்கின. நிதிப் பற்றாக்குறையால் திட்டப் பணிகள் தாமதமாகி வந்தன. 50 சதவீத பணிகள் முடிந்த நிலையில், பின்னா் வந்த காங்கிரஸ் ஆட்சியில், மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.

புதுச்சேரியில் 3.75 ஏக்கா் பரப்பளவில் உள்ள இடத்தில், கட்டப்பட்டு வரும் இந்த மணிமண்டபத்தில், காமராஜரின் வரலாற்றை நினைவு கூரும் அருங்காட்சியகம், மாணவா் சோ்க்கைக்கான சென்டாக் அலுவலகம், ஐஏஎஸ், ஐபிஎஸ் தோ்வுக்கான பயிற்சி மையங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ. 23 கோடி செலவில் மணிமண்டபம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், மணிமண்டபம் திறக்கப்பட வேண்டுமென கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த நிலையில், மீண்டும் முதல்வரான என்.ரங்கசாமி, வியாழக்கிழமை காமராஜா் மணிமண்டப கட்டுமான பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா், விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, காமராஜா் பிறந்த நாளில் மணிமண்டபத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.