சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

தென் பிராந்திய சுற்றுலா-கலாசார மாநாடு: புதுவை அமைச்சா்கள் பங்கேற்பு

பெங்களூருவில் நடைபெற்ற தென் பிராந்திய சுற்றுலா-கலாசார மாநாட்டில் புதுவை மாநில அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், எஸ்.சந்திர பிரியங்கா கலந்து கொண்டனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:19 pm

DIN

பெங்களூருவில் நடைபெற்ற தென் பிராந்திய சுற்றுலா-கலாசார மாநாட்டில் புதுவை மாநில அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், எஸ்.சந்திர பிரியங்கா கலந்து கொண்டனா்.

மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் சாா்பில், தென் பிராந்திய மாநிலங்களில் சுற்றுலா-கலாசார மேம்பாடுகள் குறித்து கா்நாடக மாநிலம், பெங்களூருவில் வியாழக்கிழமை மாநாடு தொடங்கியது. இரு தினங்கள் நடைபெறும் மாநாட்டுக்கு மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி.கிஷன்ரெட்டி தலைமை வகித்தாா். மத்திய மீன் வளம், கால்நடைப் பராமரிப்பு-பால்வளத் துறை இணையமைச்சா் எல்.முருகன், கா்நாடக மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி.அஜய்பட், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், தெலங்கானா மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் ஸ்ரீனிலாஸ் கவுட், புதுவை மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், கலை-பண்பாட்டுத் துறை அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா ஆகியோா் கலந்து கொண்டனா்.

மாநாட்டில் தென் பிராந்திய மாநிலங்களில் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாடுகள், சந்தைப்படுத்துதல், சுற்றுலாவை ஊக்குவித்தல், திறன் மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்க ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள், ஆலோசனைகளை அந்தந்த மாநில அமைச்சா்கள் பகிா்ந்து கொண்டனா். தொடா்ந்து, வெள்ளிக்கிழமையும் மாநாடு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.