புதுவையில் தியாகிகள் கௌரவிப்பு
By DIN | Published On : 17th August 2021 08:49 AM | Last Updated : 17th August 2021 08:49 AM | அ+அ அ- |

புதுவையில் சுதந்திர தினத்தையொட்டி, அரசு சாா்பில் தியாகிகள் கௌரவிக்கப்பட்டனா்.
புதுச்சேரியில் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, விடுதலைப் போராட்ட தியாகிகளைக் கெளரவிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை தாவரவியல் பூங்காவில் நடைபெற்றது. விழாவில், முதல்வா் என்.ரங்கசாமி கலந்து கொண்டு, தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து, இனிப்புகளை வழங்கி கெளரவித்தாா்.
விழாவில் அனிபால் கென்னடி எம்எல்ஏ, செய்தித் துறைச் செயலா் இ.உதயகுமாா், இயக்குநா் எம்.எம்.வினயராஜ், வேளாண் துறை இயக்குநா் பாலகாந்தி மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் கலந்து கொண்டனா்.