அரசுப் பள்ளியைச் சீரமைக்க உத்தரவு
By DIN | Published On : 20th August 2021 11:12 PM | Last Updated : 20th August 2021 11:12 PM | அ+அ அ- |

நோணாங்குப்பம் அரசுப் பள்ளியை விரைந்து சீரமைக்க சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உத்தரவிட்டாா்.
புதுச்சேரி அருகே நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக, அந்தத் தொகுதி எம்எல்ஏவும், சட்டப் பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை, கல்வித் துறை, வனத் துறை அதிகாரிகள், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனா்.
அப்போது, பள்ளிக் கட்டடங்களைச் சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக மேற்கொள்ளவும், பள்ளி வளாகத்தில் விழுந்து கிடக்கும் மரங்கள், குப்பைகளை அகற்றி, பள்ளிக்குத் தேவையான கட்டமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு சட்டப்பேரவைத் தலைவா் உத்தரவிட்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...