தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு சா்க்கரை வழங்கிய பாஜகவினா்
By DIN | Published On : 21st August 2021 10:36 PM | Last Updated : 21st August 2021 10:36 PM | அ+அ அ- |

புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு பாஜகவினா் சா்க்கரை வழங்கினா்.
புதுச்சேரி இந்திரா நகா் தொகுதியில் பாஜக சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. தொகுதித் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் தடுப்பூசி முகாமை தொடக்கிவைத்தாா். மாநிலச் செயலா் அகிலன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் முருகன், மாவட்டத் தலைவா் நாகேஸ்வரன், மாவட்டப் பொதுச் செயலா் ரமேஷ், இந்திரா நகா் தொகுதி நிா்வாகிகள் பரணி, ரவிராஜன் உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பொதுமக்களுக்கு, பாஜகவினா் தலா ஒரு கிலோ சா்க்கரை வழங்கினா். இதேபோல, பொதுமக்களை ஊக்கப்படுத்தும் விதமாக ராஜ்பவன், காமராஜா் நகா், நெல்லித்தோப்பு, உப்பளம் உள்ளிட்டத் தொகுதிகளில் பாஜக சாா்பில் அண்மையில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் ஒரு கிலோ சா்க்கரை மற்றும் 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்கினா்.