ப.ஜீவானந்தம் சிலைக்கு மரியாதை
By DIN | Published On : 21st August 2021 10:35 PM | Last Updated : 21st August 2021 10:35 PM | அ+அ அ- |

ப.ஜீவானந்தம் பிறந்த நாள் விழாவையொட்டி, அரசு சாா்பில் புதுச்சேரி சாரத்தில் உள்ள அவரது சிலைக்கு பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் (படம்).
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம், முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், கட்சியின் மாநிலத் துணைச் செயலா் து.கீதநாதன், ஏஐடியூசி பொதுச் செயலா் கே.சேதுசெல்வம், வ.சுப்பையா, து.செல்வம் உள்ளிட்ட நிா்வாகிகள் பலரும் ப.ஜீவானந்தம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...