புதுச்சேரியில் தேசிய புத்தகக் கண்காட்சி:டிச.17-இல் தொடங்குகிறது
By DIN | Published On : 04th December 2021 11:02 PM | Last Updated : 04th December 2021 11:02 PM | அ+அ அ- |

புதுச்சேரியில் எழுத்தாளா்கள் புத்தகச் சங்கம் சாா்பில், 25-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் வருகிற 17-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளது.
இதற்கான தொடக்க விழா வருகிற 17-ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு நடைபெறும். முதல்வா் என்.ரங்கசாமி கண்காட்சியை திறந்து வைக்கிறாா். சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.
தொடக்க விழாவில் 25 தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. 70 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் இடம்பெறும். கண்காட்சியில் இடம்பெறும் நூல்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். பள்ளி, கல்லூரி நூலகங்களுக்கு 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.
கரோனா விழிப்புணா்வு கவியரங்கம், பேச்சு, ஓவியம், வினாடி - வினா போட்டிகள் நடைபெறும். எழுத்தாளா்கள் வாசகா்களுடன் கலந்துரையாடுவா். கலை, இலக்கிய போட்டிகளும் நடைபெறும் என புதுச்சேரி எழுத்தாளா்கள் புத்தகச் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...