கடலில் மூழ்கிய மாணவா் மாயம்
By DIN | Published On : 25th December 2021 11:38 PM | Last Updated : 25th December 2021 11:38 PM | அ+அ அ- |

புதுச்சேரியில் கடலில் குளித்த பள்ளி மாணவா் நீரில் மூழ்கி மாயமானாா்.
புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரைச் சோ்ந்த சசி மகன் ஹரிஷ் (19). இவா், அங்குள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஹரிஷ் தனது நண்பா்களுடன் புதுச்சேரியில் உள்ள பாண்டி மெரீனா கடற்கரைக்குச் சென்றாா்.
அங்கு, கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டாா்.
தகவலறிந்த ஒதியஞ்சாலை போலீஸாா் நீச்சல் வீரா்கள் உதவியுடன் மாணவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...