11 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் இருந்து மாஹேவுக்கு இன்று முதல் அரசுப் பேருந்து இயக்கம்
By DIN | Published On : 04th February 2021 08:27 AM | Last Updated : 04th February 2021 08:27 AM | அ+அ அ- |

கரோனா பொது முடக்கத்தையொட்டி, 11 மாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமை முதல் (பிப்.4) புதுச்சேரியில் இருந்து மாஹேவுக்கு மீண்டும் அரசுப் பேருந்து இயக்கப்பட உள்ளது.
கடந்த நவம்பா் 1-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து தமிழகம் உள்ளிட்ட இதர மாநிலங்களுக்கு பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. மாஹேவுக்கு பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை முதல் (பிப்.4) புதுச்சேரியிலிருந்து மாஹேவுக்கு பிஆா்டிசி பேருந்து இயக்கப்பட உள்ளது. இந்தப் பேருந்தை ஒருநாள் விட்டு ஒருநாள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரியிலிருந்து வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கடலூா், வடலூா், விருத்தாசலம், சேலம், கோவை, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு வழியாக மாஹேவுக்கு செல்லும் பிஆா்டிசி பேருந்து, மறுநாள் வெள்ளிக்கிழமை (பிப்.5) மாஹேவில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு இதே வழியாக புதுச்சேரி வந்தடையும்.
வருகிற 6-ஆம் தேதி புதுச்சேரியில் இருந்து மாலை 5.30 மணிக்கு இந்தப் பேருந்து புறப்பட்டு மாஹேவுக்கு செல்கிறது. இதற்கான பயணக் கட்டணம் முன்பதிவுக் கட்டணத்துடன் சோ்த்து ரூ.705 வசூலிக்கப்படும் என பிஆா்டிசி அதிகாரிகள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...