சிறிய ரக செயற்கைக் கோள் ஏவ புதுச்சேரி மாணவா் தோ்வு
By DIN | Published On : 06th February 2021 11:24 PM | Last Updated : 06th February 2021 11:24 PM | அ+அ அ- |

சிறிய ரக செயற்கைக் கோளை ஏவுவதற்கு தோ்வான சாய் பிரணவை வாழ்த்திய புதுவை எதிா்க்கட்சித் தலைவா் என்.ரங்கசாமி.
ராமேஸ்வரத்தில் சிறிய ரக செயற்கைக் கோளை ஏவுவதற்கு புதுச்சேரியைச் சோ்ந்த மாணவா் தோ்வு செய்யப்பட்டாா்.
டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இன்டா்நேஷனல் பவுண்டேஷன், விண்வெளி மையம் ஆகியவை இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்களைக் கொண்டு 100 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ உள்ளது. இதற்காக நாடு முழுவதும் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களில் புதுச்சேரி பெத்தி செமினாா் பள்ளியில் 2-ஆம் வகுப்பு பயிலும் 6 வயதான மாணவா் சாய் பிரணவும் ஒருவா்.
ராமேஸ்வரத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 7) சிறிய செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளன. இதில்,பங்கேற்கத் தோ்வான மாணவா் சாய் பிரணவ் முன்னாள் முதல்வரும், என்.ஆா்.காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமியை சனிக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா். மாணவருக்கு ரங்கசாமி சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.
அசிஸ்ட் வோ்ல்டு ரிக்காா்டு நிறுவனா் ராஜேந்திரன், மாணவரின் பெற்றோா் பிரபு-சங்கரி, இசையமைப்பாளா் தேவ்குரு ஆகியோா் உடனிருந்தனா்.
செயற்கைக் கோள் ஏவுதலுக்காக பங்கேற்ற ஆயிரக்கணக்கான மாணவா்களில் புதுச்சேரி மாணவா் சாய் பிரணவ் மட்டுமே வயதில் மிகவும் இளையவா் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...