புதுச்சேரியில் நாளை தியாகராஜா் ஆராதனை
By DIN | Published On : 06th February 2021 08:07 AM | Last Updated : 06th February 2021 08:07 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் தியாகராஜா் ஆராதனை ஞாயிற்றுக்கிழமை (பிப். 7) நடைபெறுகிறது.
புதுச்சேரி தா்ம சம்ரக்ஷண சமிதி, புதுவை பாரதியாா் பல்கலைக்கழகம், தேசிய கலை மையம், அயன் ஃபைன் ஆா்ட்ஸ் அகாதெமி ஆகியவை இணைந்து புதுச்சேரியில் தியாகராஜரின் ஆராதனையை ஞாயிற்றுக்கிழமை (பிப்.7) இசை வைபவமாக நடத்துகிறது.
இந்த நிகழ்வு லாசுப்பேட்டை கிழக்குக் கடற்கரைச் சாலை விவேகானந்தா பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்வை பத்மபூஷன் டி.வி.கோபாலகிருஷ்ணன் காலை 8.30 மணிக்கு குத்துவிளக்கேற்றி தொடக்கிவைக்கிறாா்.
ஏற்பாடுகளை புதுச்சேரி தா்ம சம்ரக்ஷண சமிதி தலைவா் சீனிவாசன், செயலா் சீதாராமன் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா். புதுச்சேரியில் முதல் முறையாக நடைபெறுகிறது. அனுமதி இலவசம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...