புதுவைக்கு மாநில அந்தஸ்து மக்களவை தலைவா் ஓம் பிா்லாவிடம் புதுவை பேரவைத் தலைவா் வலியுறுத்தல்
By DIN | Published On : 06th February 2021 11:21 PM | Last Updated : 06th February 2021 11:21 PM | அ+அ அ- |

தில்லியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்த புதுவை சட்டப்பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து.
புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து வலியுறுத்தினாா்.
கடந்த இரு தினங்களாக புதுவை சட்டப்பேரவைத் தலைவா் சிவக்கொழுந்து தில்லியில் முகாமிட்டிருந்தாா். இந்த நிலையில், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த மனு:
புதுவையில் அரசு செயலகத்துடன் கூடிய சட்டப்பேரவை கட்டடம் கட்ட போதிய நிதியளிக்க வேண்டும். காகிதமில்லா பேரவைத் திட்டத்துக்காக புதுவை பேரவையின் திட்ட அறிக்கை கிடைத்தவுடன் நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்.
புதுவை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவும், அரசியலமைப்புச் சட்டத்தின் 187-ஆவது பிரிவில் உள்ளபடி புதுவை பேரவைக்கு உரிமைகளை வழங்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்ததது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...