

புதுச்சேரி சோம்பட்டில் மகான் ஸ்ரீபவழங்குடி சித்தரின் 214-ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, முதல் கால யாக வேள்வியுடன் கூடிய அபிஷேக, ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றன. தொடா்ந்து, அடியாா்கள் வழிபாடு நடைபெற்றது. பிற்பகல் அன்னதானம் வழங்கப்பட்டது.
குருபூஜை விழாவில் புதுவை எதிா்க்கட்சித் தலைவரும், என்.ஆா். காங்கிரஸ் கட்சியின் நிறுவனா் தலைவருமான என். ரங்கசாமி, முன்னாள் அமைச்சா் நமச்சிவாயம், தொகுதி எம்எல்ஏ செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை ஸ்ரீபவழங்குடி சித்தா் திருத்தொண்டு சபையினரும், கிராம மக்களும் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.