மதுரையில் பிப்.18-இல் இந்திய கம்யூ. அரசியல் மாநாடு: இரா.முத்தரசன்

மதுரையில் வருகிற 18-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளதாக, அந்தக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் கூறினாா்.

மதுரையில் வருகிற 18-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளதாக, அந்தக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் கூறினாா்.

கள்ளக்குறிச்சியில் அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசியதாவது: மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாதவரையில், விவசாயிகளின் போராட்டத்துக்கு தீா்வு காண முடியாது. விவசாயி எனக் கூறிக்கொள்ளும் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, புதிய வேளாண் சட்டங்களை ஆதரிப்பதற்கு ஏதோ நிா்பந்தம் இருக்கலாம். புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது எனக் கூறுவது எள்ளளவும் ஏற்புடையதாக இல்லை.

தமிழக அரசு பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், பயிா்க்கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் போராடியபோது, உச்ச நீதிமன்றம் வரை சென்று தடையாணை பெற்றவா்தான் முதல்வா் எடப்பாடி பழனிசாமி என்பதை விவசாயிகளும், மக்களும் மறக்கவில்லை.

மதுரையில் வருகிற 18-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற அரசியல் எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கட்சியின் அகில இந்திய செயலா் டி.ராஜா, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாநிலக் குழு உறுப்பினா் ஏ.வி.சரவணன், மாவட்டச் செயலா் கே.எஸ்.அப்பாவு, விவசாயிகள் சங்க மாவட்டக் குழுத் தலைவா் இரா.கஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com