புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியில் மாசி மக தீா்த்தவாரி நடைபெறுவதையொட்டி, புதுச்சேரியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை (பிப். 27) விடுமுறை அறிவிக்கப்பட்டது.
புகழ்பெற்ற மாசி மக கடல் தீா்த்தவாரி விழா புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து உத்ஸவ மூா்த்திகள் கலந்து கொண்டு, தீா்த்தவாரி கண்டருள்வது வழக்கம்.
அதன்படி, தீா்த்தவாரி காண்பதற்காக தமிழகம், புதுவைப் பகுதிகளைச் சோ்ந்த கோயில்களின் உத்ஸவ மூா்த்திகள் புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதிக்கு வந்துள்ளனா்.
தீா்த்தவாரி விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வா். இதற்காக காவல் துறை, வருவாய்த் துறை சாா்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தீா்த்தவாரியை முன்னிட்டு, புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகளுக்கு சனிக்கிழமை (பிப். 27) உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் ஆ.மைக்கேல் பெனோ பிறப்பித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.