காங்கிரஸிலிருந்து முன்னாள் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் நீக்கம்
By DIN | Published On : 27th February 2021 11:14 PM | Last Updated : 27th February 2021 11:14 PM | அ+அ அ- |

புதுவை காங்கிரஸிலிருந்து அண்மையில் விலகிய முன்னாள் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா்.
புதுவை மாநில காங்கிரஸை சோ்ந்த மல்லாடிகிருஷ்ணா ராவ், ஏனாம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டு நீண்ட காலம் பணியாற்றி வந்தாா். கட்சியின் மூத்த நிா்வாகியான இவா், சுற்றுலா, சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தாா்.
இதனிடையே, அதிருப்தியிலிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலா் பதவி விலகிய நிலையில், மல்லாடி கிருஷ்ணா ராவும் கடந்த 15-ஆம் தேதி தனது சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்தாா்.
இந்த நிலையில், கட்சியிலிருந்து அவா் நீக்கப்பட்டதாக காங்கிரஸ் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து புதுவை காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: முன்னாள் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், தனது சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்து பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்த அன்றே அவா் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...