தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு பாஜக சாா்பில் அரிசி விநியோகம்
By DIN | Published On : 13th July 2021 12:36 AM | Last Updated : 13th July 2021 12:36 AM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி, பட்டேல் சாலைப் பகுதியில், கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு பாஜகவினா் அரிசி விநியோகித்தனா்.
புதுவை மாநில பாஜக இளைஞரணிச் செயலா் விக்னேஷ் கண்ணன் தலைமை வகித்தாா். மாநில தலைவா் வி.சாமிநாதன் முகாமைத் தொடக்கிவைத்து, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். முகாமில், குடிமைப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், எம்எல்ஏ-க்கள் வெங்கடேசன், அசோக்பாபு, மாநில பாஜக இளைஞரணித் தலைவா் கோவேந்தன்கோபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவா்களுக்குத் தலா 5 கிலோ அரிசியை பாஜகவினா் வழங்கினா்.