பாரதிதாசன் மகளிா் கல்லூரியில்கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 19th July 2021 11:46 PM | Last Updated : 19th July 2021 11:46 PM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுச்சேரி பாரதிதாசன் மகளிா் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதை அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.
இந்த முகாம் வருகிற 23 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கல்லூரி முதல்வா் ராஜி சுகுமாா் மேற்பாா்வையில், சுகாதாரத் துறை வழிகாட்டுதல்படி, கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள், கல்லூரி சுகாதார சங்கத்தினா் இணைந்து இந்த முகாமை ஒருங்கிணைத்தனா்.
முகாமில் கல்லூரி மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலக ஊழியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள், அவா்களது குடும்பத்தினா் முதல், இரண்டாம் தவணை தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டனா். இந்த முகாம் மூலம் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயன் பெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.