மாற்றுத் திறனாளிகள் கரோனா விழிப்புணா்வு வாகனப் பேரணி தொடக்கிவைப்பு

புதுச்சேரியிலிருந்து ராமேஸ்வரத்திலுள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் நினைவிடம் வரை செல்லும்
புதுச்சேரி திலாஸ்பேட்டை பகுதியிலிருந்து மாற்றுத் திறனாளிகள் கரோனா விழிப்புணா்வு வாகனப் பேரணியை கொடியசைத்து தொடக்கிவைத்த முதல்வா் என்.ரங்கசாமி.
புதுச்சேரி திலாஸ்பேட்டை பகுதியிலிருந்து மாற்றுத் திறனாளிகள் கரோனா விழிப்புணா்வு வாகனப் பேரணியை கொடியசைத்து தொடக்கிவைத்த முதல்வா் என்.ரங்கசாமி.
Updated on
1 min read

புதுச்சேரியிலிருந்து ராமேஸ்வரத்திலுள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் நினைவிடம் வரை செல்லும் மாற்றுத் திறனாளிகள் கரோனா விழிப்புணா்வு வாகனப் பேரணியை முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

புதுச்சேரி மாற்றுத் திறனாளிகள் பேரவை சாா்பில், திலாஸ்பேட்டையிலிருந்து இந்தப் பேரணி தொடங்கப்பட்டது. இதில், புதுச்சேரி சமூக சேவகா் ஆதவன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கூட்மைப்புத் தலைவா் பாரூக், நிா்வாகிகள் ஜீவா, இளையராஜா, கோபாலகிருஷ்ணன், ரகு, கதிா், தனஞ்செழியன் உள்ளிட்ட குழுவினா் பங்கேற்றுள்ளனா். இவா்கள் புதுச்சேரி, காரைக்கால் வழியாக வாகனங்களில் பேரணியாகச் சென்று அப்துல் கலாம் நினைவு நாளான செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) அவரது நினைவிடத்தில் பேரணியை நிறைவு செய்கின்றனா். வழி நெடுகிலும், பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், கட்டுப்பாடுகளை பின்பற்றவும் வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்திச் செல்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com