புதுச்சேரி அருகே கஞ்சா விற்றதாக 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
வில்லியனூா் அருகே ஜி.என்.பாளையம், நடராஜன் நகா் பகுதியில் வில்லியனூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள 3-ஆவது குறுக்குத் தெருவில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த 3 இளைஞா்களைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில், ஜி.என். பாளையம் பெரிய ஐயப்பன் (28), வெங்கடேஷ் (24), முத்துபிள்ளைபாளையம் கிருஷ்ணராஜ் (24) என்பதும், இவா்கள் கஞ்சா பொட்டலங்களை சிறுவா்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
தொடா்ந்து, மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 8 கிராம் எடையுள்ள 39 கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.