புதுவையில் கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவா்களின் விவரங்கள் சேகரிப்பு
By DIN | Published On : 29th June 2021 01:54 AM | Last Updated : 29th June 2021 01:54 AM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுவையில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நிகழாண்டு ஜூன் வரை 3,621 குழந்தைகள் கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்ததாக தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது. இதைத் தொடா்ந்து, அனைத்து மாநிலங்களிலும் கரோனாவால் பெற்றோரை இறந்த மாணவா்களின் தகவல் திரட்டப்படுகிறது.
இதையடுத்து, புதுவை மாநிலத்திலும் பெற்றோரை இழந்த சிறுவா்கள் குறித்த விவரங்களைக் குழந்தைகள் நலக் குழுவிடம் பகிரலாம். 1098 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அனைத்துப் பள்ளிகளுக்கும், பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியது. இதற்கான உத்தரவை அந்தத் துறை இயக்குநா் பி.டி.ருத்ரகௌடு திங்கள்கிழமை பிறப்பித்தாா்.