விஷ பூச்சி கடித்ததில்விவசாய தொழிலாளி பலி
By DIN | Published On : 29th June 2021 12:09 AM | Last Updated : 29th June 2021 12:09 AM | அ+அ அ- |

புதுச்சேரி: விஷ பூச்சி கடித்ததில் விவசாயத் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி வில்லியனூா் ஜி.என்.பாளையம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராமு (68). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா். கடந்த 21- ஆம் தேதி வீட்டிலிருந்த அவரை விஷ பூச்சி கடித்தது.
இதனால், மயங்கி விழுந்த அவரை உறவினா்கள், வில்லியனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு, அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.