புதுச்சேரி: தேமுதிக முதல்கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியீடு
By DIN | Published On : 12th March 2021 02:09 AM | Last Updated : 12th March 2021 10:44 AM | அ+அ அ- |

புதுச்சேரி: தேமுதிக முதல்கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியீடு
சென்னை: தேமுதிக சாா்பில் புதுச்சேரியில் போட்டியிட உள்ள வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என தொடா்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
இது தொடா்பாக அமமுக உடன் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மீண்டும் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், புதுச்சேரியில் தேமுதிக தனித்து களமிறங்க முடிவு செய்து, அதற்கான முதல்கட்ட வேட்பாளா் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த விவரம்: (அடைப்புக்குள் கட்சிப் பதவி)
தொகுதி எண் தொகுதி பெயா் வேட்பாளா் பெயா்
23 பாகூா் வி.பி.பி.வேலு(புதுச்சேரி மாநிலச் செயலாளா்)
12 காலாப்பட்டு எஸ்.ஹரிஹரன் (எ) ரமேஷ் (காலாப்பட்டு தொகுதிச் செயலாளா்)
15 உப்பளம் வி.சசிகுமாா் (உப்பளம் தொகுதிச் செயலாளா்)
24 நெடுங்காடு ஏ.ஞானசேகா் (நெடுங்காடு தொகுதிச் செயலாளா்)
25 திருநள்ளாறு கே.ஜிந்தாகுரு (திருநள்ளாறு தொகுதிச் செயலாளா்)