புதுவையில் மேலும் 22 பேருக்கு கரோனா
By DIN | Published On : 12th March 2021 05:40 AM | Last Updated : 12th March 2021 05:40 AM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுவையில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரி - 20, காரைக்கால் - 2 என மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏனாம், மாஹேவில் தொற்று பாதிப்பு இல்லை. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39,954 ஆக உயா்ந்தது.
தற்போது, மருத்துவமனைகளில் 86 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 90 பேரும் என மொத்தம் 176 போ் சிகிச்சையில் உள்ளனா். வியாழக்கிழமை வெளியான முடிவுகளில் உயிரிழப்பு பதிவாகவில்லை.
கரோனா தொற்று மாநிலத்தில் இதுவரை 670 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.68 சதவீதம்.
இதனிடையே, வியாழக்கிழமை 21 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 39,108 -ஆக (97.88 சதவீதம்) அதிகரித்தது.
புதுவை மாநிலத்தில் இதுவரை 11,564 சுகாதாரப் பணியாளா்கள், 3,872 முன்களப் பணியாளா்கள், 6,209 பொதுமக்கள் என 21,645 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...