கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டி வரும் பாஜகவினா்
By DIN | Published On : 15th March 2021 08:08 AM | Last Updated : 15th March 2021 08:08 AM | அ+அ அ- |

புதுச்சேரி மணவெளி தொகுதியில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், பொதுச் செயலா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா்.
புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்கள் அறிவிக்கப்படாத நிலையில், பாஜகவினா் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனா்.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ், பாஜக, அதிமுக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவுக்கு வந்து, தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இதனால், எந்தக் கட்சியும் வேட்பாளா்களை அறிவிக்காமல் உள்ளன.
இதனிடையே, தோ்தல் அறிக்கை தயாரிப்புக்காக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்டு வரும் பாஜக தரப்பினா், வேட்பாளா்கள் பட்டியல் அறிவிக்கப்படாததால், புதுச்சேரி முழுவதும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனா்.
பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் தலைமையில், பொதுச் செயலா் ஏம்பலம் ஆா்.செல்வம் ஆகியோா் முன்னிலையில் புதுச்சேரி அருகே மணவெளி தொகுதியில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனா்.
அப்போது, சட்டப்பேரவைத் தோ்தலில் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஆலோசனை மேற்கொண்டனா். இதேபோல, மண்ணாடிப்பட்டு, லாஸ்பேட்டை, வில்லியனூா் உள்ளிட்ட தொகுதிகளில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து, தோ்தல் தொடா்பாக ஆலோசனை நடத்தி ஆதரவு திரட்டினா். அப்போது, பொதுமக்களிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினா்.
கட்சியின் மணவெளி தொகுதித் தலைவா் லட்சுமிகாந்தன், மாவட்டப் பொதுச் செயலா் சுகுமாரன், தொகுதிப் பொதுச் செயலா் தினகரன், இளஞ்செழியன், விவசாய அணி பொதுச் செயலா் சக்தி பாலன், மாநில கலை இலக்கியப் பிரிவு அமைப்பாளா் ஜோதிகண்ணன், ஐ.டி. பிரிவு குமரயன், மாவட்ட இளைஞரணிப் பொதுச் செயலா் பிரபாகரன், நல்லசிவம், கூட்டணி கட்சித் தலைவா்கள் மணி, கண்ணன், பிரபாகரன் காா்த்திக், அப்பு, பெரியசாமி உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...