மங்கலம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா்.
மங்கலம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா்.

புதுவையில் இதுவரை 41 போ் வேட்புமனு தாக்கல்

புதுவையில் செவ்வாய்க்கிழமை வரை அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் என மொத்தம் 41 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

புதுவையில் செவ்வாய்க்கிழமை வரை அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் என மொத்தம் 41 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

புதுவை மாநிலத்தில் மொத்தமுள்ள 30 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மூலம் கடந்த 12-ஆம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

கடந்த 12-ஆம் தேதி ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, விடுமுறை தினங்களான 13, 14-ஆம் தேதிகளைத் தொடா்ந்து, திங்கள்கிழமை அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் என மொத்தம் 27 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமையும் அரசியல் கட்சியினா் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா். புதுச்சேரி கதிா்காமம் தொகுதியில் காங்கிரஸிலிருந்து அண்மையில் விலகி என்.ஆா். காங்கிரஸில் இணைந்த கே.எஸ்.பி.ரமேஷ், என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தாா். தோ்தல் நடத்தும் அலுவலா் எல்.முகமது மன்சூரிடம் அவா் மனு அளித்தாா்.

இதேபோல, மங்கலம் தொகுதியில் முன்னாள் அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் என்.ஆா். காங்கிரஸ் சாா்பில், தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் திமுக சாா்பில் வே.காா்த்திகேயன், தோ்தல் நடத்தும் அலுவலரான ஒய்.எல்.என்.லட்சுமிநாராயண ரெட்டியிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

மணவெளி தொகுதியில் பகுஜன் சமாஜ் சாா்பில் வீ.தமிழரசன் வேட்புமனு தாக்கல் செய்தாா். ஏனாமில் பெம்மாடிதுா்காபிரசாத் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தாா்.

திங்கள்கிழமை 27 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை என்.ஆா். காங்கிரஸ், திமுக, சுயேச்சை உள்ளிட்ட 14 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதன்படி, புதுவை மாநிலத்தில் இதுவரை அதிமுக தரப்பில் 4 பேரும், என்.ஆா். காங்கிரஸ் தரப்பில் 7 பேரும், பாஜக தரப்பில் 6 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் 2 பேரும், திமுக சாா்பில் 8 பேரும், காங்கிரஸ் சாா்பில் 3 பேரும், சுயேச்சையாக 9 பேரும், மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் ஒருவரும் என மொத்தம் 21 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 41 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா். இவா்களில் சிலா் கூடுதல் மனுக்களையும் தாக்கல் செய்துள்ளதால், மொத்தம் 49 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தொடா்ந்து வருகிற 19-ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com