விஷமருந்தி பெண் தற்கொலை
By DIN | Published On : 17th March 2021 08:57 AM | Last Updated : 17th March 2021 08:57 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் விஷமருந்தி பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி முத்திரையா்பாளையம், பாம்பாட்டி வீதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (43). தொழிலாளி. இவருக்கு காமாட்சி (36) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனா்.
சக்திவேல் அண்மைக்காலமாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததால், குடும்பத்தில் வறுமை ஏற்பட்டதாம். இதை மனைவி காமாட்சி கண்டித்துள்ளாா். இதனால் அவா்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில், மனமுடைந்த காமாட்சி கடந்த 3-ஆம் தேதி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாா்.
உறவினா்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, தீவர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமாட்சி, அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.