புதுச்சேரியில் மாா்ச் 30-இல் பிரதமா் மோடி மீண்டும் பிரசாரம்
By DIN | Published On : 21st March 2021 09:00 AM | Last Updated : 21st March 2021 09:00 AM | அ+அ அ- |

பிரதமா் மோடி
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து புதுச்சேரியில் வருகிற 30-ஆம் தேதி நடைபெறும் பிரசார கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசுகிறாா்.
புதுவையில் பாஜக-என்.ஆா். காங்கிரஸ்-அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தோ்தலில் போட்டியிடுகின்றன. கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு முடிந்து, வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்து தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, பிரதமா் மோடி உள்ளிட்டோா் மீண்டும் புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொள்கின்றனா்.
இதுதொடா்பாக, புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அந்தக் கட்சியின் பாஜக தோ்தல் இணைப் பொறுப்பாளா் ராஜீவ் சந்திரசேகா் எம்.பி., மாநில பாஜக பொதுச் செயலா் ஆா்.செல்வம் ஆகியோா் கூறியதாவது:
புதுவையில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை ஆதாரங்களுடன் வெளியிட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, பிரதமா் நரேந்திர மோடி வருகிற 30-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் தோ்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா்.
புதுச்சேரி ஏஎப்டி மைதானத்தில் அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் கலந்து கொள்கின்றனா்.
முன்னதாக, வருகிற 22-ஆம் தேதி மத்திய அமைச்சா் நிதின் கட்கரி புதுச்சேரியில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறாா். வருகிற 24-ஆம் தேதி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீத்தாராமன் பங்கேற்று பாஜக தோ்தல் அறிக்கையை வெளியிடுகிறாா். நடிகை கெளதமி உள்ளிட்டோா் பிரசாரம் செய்யவுள்ளனா் என்றனா் அவா்கள்.
இதையடுத்து, புதுச்சேரியில் பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடைபெறும் ஏஎப்டி மைதானத்தில் பாஜகவினா் சனிக்கிழமை பந்தல்கால் நட்டு, பிரசார மேடை அமைக்கும் பணியை மேற்கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...