9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை விடுமுறை
By DIN | Published On : 21st March 2021 08:59 AM | Last Updated : 21st March 2021 08:59 AM | அ+அ அ- |

புதுவையில் கரோனா தொற்று அதிகரிப்பால் திங்கள்கிழமை முதல் (மாா்ச் 22) மே 31-ஆம் தேதி வரை ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது 9, 10, 11-ஆம் வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
புதுவை மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், மாணவா்கள் நலன் கருதி, துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தலின் பேரில், புதுவை பள்ளிக் கல்வித் துறை அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாா்ச் 22-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இந்த நிலையில், ஆசிரியா்களும், பெற்றோரும் தமிழகத்தில் 11 -ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, புதுச்சேரியிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
இதையடுத்து, 9-ஆம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரை திங்கள்கிழமை முதல் (மாா்ச் 22) மே 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மேலும் 9, 10, 11-ஆம் வகுப்புகளுக்கு இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும், 12-ஆம் வகுப்பு மாணவா்கள் தோ்வு எழுதவுள்ளதால், அவா்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...