புதுவையில் கரோனா பாதிப்பு 2-ஆம் நாளாக 2 ஆயிரத்தைக் கடந்தது மேலும் 27 போ் பலி
By DIN | Published On : 13th May 2021 08:15 AM | Last Updated : 13th May 2021 08:15 AM | அ+அ அ- |

புதுவையில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து 2-ஆவது நாளாக 2ஆயிரத்தைக் கடந்தது. இந்தத் தொற்றுக்கு மேலும் 27 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் புதன்கிழமை வெளியான 9,176 பேருக்கான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 1,590 போ், காரைக்காலில் 238 போ், ஏனாமில் 129 போ், மாஹேவில் 50 போ் என மொத்தம் 2,007 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77,031-ஆக உயா்ந்தது. இதில், தற்போது ஜிப்மரில் 519 பேரும், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 340 பேரும், கொவைட் கோ் மையங்களில் 699 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 13,497 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 15,562 போ் சிகிச்சையில் உள்ளனா்.
புதுச்சேரியில் 19 போ், காரைக்காலில் 3 போ், ஏனாமில் 2 போ், மாஹேவில் 3 போ் என 27 போ் உயிரிழந்தனா். இவா்களில் 14 போ் ஆண்கள், 13 போ் பெண்கள். இதனால், மாநிலத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,045 ஆகவும், இறப்பு விகிதம் 1.36 ஆகவும் உள்ளது.
இதனிடையே, மாநிலம் முழுவதும் 1,247 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 60,424 (78.44 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 2,20,963 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.