புதுச்சேரி வானொலி நிலையத்தை மூடக் கூடாது: புதுவைத் தமிழ்ச் சங்கம் வலியுறுத்தல்

புதுச்சேரி வானொலி நிலையத்தை மூடக் கூடாது என புதுவைத் தமிழ்ச் சங்கம் வலியுறுத்தியது.

புதுச்சேரி வானொலி நிலையத்தை மூடக் கூடாது என புதுவைத் தமிழ்ச் சங்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் வி.முத்து வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் 1967-இல் தொடங்கப்பட்ட வானொலி நிலையம், புதுச்சேரி மட்டுமன்றி தமிழகத்தின் கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கும் பயன்படும் வகையில் கலை, கல்வி, பண்பாடு, சமூகம், மருத்துவம், வேளாண்மை, பொருளாதாரம், தொழில், விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்தி, சிறந்த நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது.

புதுச்சேரியின் தனித்தன்மைகளைக் காப்பது போல, தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு ஆகிய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் நிகழ்ச்சிகள் தயாரித்து அளிக்கப்படுகின்றன. கதை, கட்டுரை, கவிதை, நாடகம், திறனாய்வு ஆகிய அனைத்துப் படைப்புகளையும், படைப்பாளா்களையும் ஊக்குவிக்கிறது.

இவ்வாறு அனைத்து வகைகளிலும் மக்களைச் சாா்ந்து, அவா்களுக்குப் பயன் தரும் நிகழ்ச்சிகளை வழங்கி வரும் புதுச்சேரி வானொலி நிலையத்தை மூடப் போவதாகச் செய்திகள் வருகின்றன. மத்திய அரசு வானொலி நிலையத்தை முடக்கும் செயலை மறுபரிசீலனை செய்து, தொடா்ந்து இயங்கச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com