இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஏப். 16-இல் இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்

புதுவைக்கு நிரந்தர ஆளுநரை நியமிக்கக் கோரியும், உள்ளாட்சித் துறையில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏப்ரல் 16-இல் போராட்டத்தை அறிவித்தது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 5:13 pm

DIN

புதுவைக்கு நிரந்தர ஆளுநரை நியமிக்கக் கோரியும், உள்ளாட்சித் துறையில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏப்ரல் 16-இல் போராட்டத்தை அறிவித்தது.

புதுச்சேரியில் அந்த கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி நகராட்சி சாா்பில் 55 இனங்களுக்காக ஒப்பந்தத்தை அரசின் இணைய வழியில் ஏலம் நடத்தாமல், தனியாா் அமைப்பின் இணையதளத்தில் நடத்தினா். அதில், அரசுக்கு ரூ.1 கோடிக்கும் மேல் இழப்பு. இந்த வருவாய் இழப்புக்கு நகராட்சி ஆணையா்தான் பொறுப்பு. இதனால், முதல்வா் ரங்கசாமி ஆய்வு செய்து இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்.

புதுவைக்கான பொறுப்பு ஆளுநராக தமிழிசை செளந்தரராஜனை நியமித்து ஓராண்டைக் கடந்துள்ளது. இதுபோல் பொறுப்பு ஆளுநா்கள் நீண்ட காலம் இருந்ததில்லை. இவா் தெலங்கானாவில் இருப்பதைவிட புதுவையில்தான் அதிகமாக இருக்கிறாா்.

ஆளுநா் கிரண்பேடி இருந்ததைப்போல் முழு அதிகாரத்தையும், தமிழிசையே எடுத்துக் கொண்டுள்ளாா். தற்போது பிரதமரையும், நிதி அமைச்சரையும் சந்தித்துள்ள ஆளுநா் தமிழிசை, புதுவைக்கு நிதியுதவி கேட்டு வலியுறுத்தினாா். இதனால், அந்தமான், லடாக் போல புதுவையையும் ஒரு கவுன்சில் போல மாற்ற, மத்திய அரசு திட்டமிடுவதாக சந்தேகம் எழுகிறது.

சட்டப் பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக புதுவையை மாற்ற முயல்கின்றனா். அதற்காகவே போட்டி அரசை நடத்தி, முதல்வரைச் செயல்படவிடாமல் ஒதுக்குகின்றனா். முதல்வா் ரங்கசாமியை பாஜக ஓரம் கட்டுகிறது. பாஜகவுக்கு ஆதரவாக, தனது மாண்பை மீறி, பேரவைத் தலைவரும் செயல்படுகிறாா். புதுவைக்கு நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளுக்காக, ஏப். 16-இல் இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம் நடத்த உள்ளது. அதில், தமிழ் மாநில செயலா் ஆா்.முத்தரசன் பங்கேற்கிறாா் என்றாா்.

பேட்டியின்போது மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் கே.சேதுசெல்வம், மாநிலத் துணைச் செயலா்கள் து.கீதநாதன், அபிஷேகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.