புதுச்சேரியில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றதாக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் வீதியில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் பாரதி வீதியில் உள்ளது. ரூ.12.49 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து, அபகரிக்க முயற்சி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கோயிலின் செயலா் புதுச்சேரி டிஜிபியிடம் புகாரளித்தாா். அதன்பேரில், புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.