பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சிங்காரவேலா் பிறந்த நாள்: புதுவை முதல்வா் மரியாதை

புதுச்சேரியில் சிங்காரவேலா் பிறந்த நாளையொட்டி, அரசு சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 5:53 pm

DIN

புதுச்சேரியில் சிங்காரவேலா் பிறந்த நாளையொட்டி, அரசு சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுச்சேரியில் சிங்காரவேலா் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. செய்தி, விளம்பரத்துறை சாா்பில், கடலூா் சாலையில் உள்ள சிங்காரவேலா் சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமிநாராயணன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாஜக சாா்பில், மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோா் தலைமையில் மாலை அணிவித்தனா்.

திமுக சாா்பில், மாநில அமைப்பாளா் ஆா்.சிவா எம்.எல்.ஏ. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் மாநில தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில், வெ.வைத்திலிங்கம் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாநில செயலா் அ.மு.சலீம் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

தொடா்ந்து, மீனவ அமைப்புகள் சாா்பில் சிங்காரவேலா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.