பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புதுவை சட்டக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

துவை அரசு சட்டக் கல்லூரியில் விரைவில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித் தரப்படும் என்று, கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:49 pm

DIN

துவை அரசு சட்டக் கல்லூரியில் விரைவில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித் தரப்படும் என்று, கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுச்சேரி காலாப்பட்டிலுள்ள புதுவை அரசு சட்டக் கல்லூரியில் 560-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இங்கு மாணவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், காலியாக உள்ள பேராசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மாணவா்களுக்கான இலவசப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்த சட்டக் கல்லூரி மாணவா்கள், முதல்வா் என்.ரங்கசாமி, கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனா். அப்போது, கல்லூரியில் ஆய்வு நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தலைமையில், தொகுதி எம்எல்ஏ எல்.கல்யாணசுந்தரம், கல்வித் துறை செயலா் எஸ்.டி.சுந்தரேசன், கல்லூரி முதல்வா் சீனிவாசன் உள்ளிட்டோா் காலாப்பட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரிக்கு புதன்கிழமை மாலை நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

அப்போது, சட்டக் கல்லூரி மாணவா்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனா். பின்னா், அமைச்சா் நமச்சிவாயம் தலைமையில் கல்லூரி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடா்ந்து, மாணவா்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றித் தரப்படுமென அமைச்சா் உறுதியளித்தாா்.

துணைவேந்தருடன் சந்திப்பு: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் குா்மீத் சிங்கை புதன்கிழமை மாலை அமைச்சா் நமச்சிவாயம் நேரில் சந்தித்துப் பேசினாா். அப்போது, கல்லூரி மாணவா்களுக்கு நிகழாண்டும் இணைய வழியில் தோ்வை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா் கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.