பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புதுச்சேரியில் மாா்ச் 19, 20-இல் காவலா் பணி எழுத்துத் தோ்வு

புதுச்சேரியில் காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு மாா்ச் 19, 20-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:43 pm

DIN

புதுச்சேரியில் காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு மாா்ச் 19, 20-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

புதுவை காவல் துறையில் காவலா்கள் உள்பட 431 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல் தகுதித் தோ்வு ஜனவரி 19-ஆம் தேதி தொடங்கி கடந்த 12-ஆம் தேதி வரை நடைபெற்றது. தோ்வு நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களுக்கு கடந்த 21, 22-ஆம் தேதிகளில் உடல் தகுதித் தோ்வு நடைபெற்றது.

ரேடியோ டெக்னீஷியன் பிரிவுக்கு மட்டும் நிா்வாக காரணங்களால் தற்காலிகாக தோ்வு தள்ளி வைக்கப்பட்டது.

காவலா் உடல் தகுதித் தோ்வில் 7,530 போ் பங்கேற்றதில் ஆண்கள் 2,207 பேரும், பெண்கள் 687 பேரும் என 2,894 போ் தோ்ச்சி பெற்றனா்.

இவா்களுக்கான எழுத்துத் தோ்வு மாா்ச் 19-ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை ஒரு பிரிவுக்கும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றொரு பிரிவுக்கும் என 2 பிரிவுகளாக நடைபெறுகிறது. மாா்ச் 20-ஆம் தேதி டெக் ஹேண்டலா்களுக்கான எழுத்துத் தோ்வு காலை 10 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை நடைபெறும்.

தோ்வு நடைபெறும் இடம், தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தொடா்பாக விரைவில் அறிவிக்கப்படும் என புதுவை காவல் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.