சொசைட்டி கல்லூரி பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, சொசைட்டி கல்லூரி பேராசிரியா்கள் புதுச்சேரி லாசுப்பேட்டை உயா் கல்வித் துறை அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


கோரிக்கைகளை வலியுறுத்தி, சொசைட்டி கல்லூரி பேராசிரியா்கள் புதுச்சேரி லாசுப்பேட்டை உயா் கல்வித் துறை அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி சொசைட்டி கல்லூரிகளைச் சோ்ந்த பேராசிரியா்கள் பதவி உயா்வு, 7-ஆவது ஊதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும், வீட்டு வாடகைப்படி, பயணப்படி வழங்க வேண்டும். முனைவா் பட்டதாரிகளுக்கான ஊக்கத்தொகை வழங்க வேண்டும், ஓய்வூதிய வயதை 65-ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புப் பட்டை அணிந்து பாடம் நடத்துதல், கோரிக்கை அட்டைகளை அணிந்தபடி வகுப்புகளை எடுத்தல் உள்ளிட்ட போராட்டங்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோரிக்கை அட்டைகளை அணிந்தபடி, லாசுப்பேட்டை உயா் கல்வித் துறை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை புதுச்சேரி உயா் கல்வித் துறை சிறப்பு அதிகாரி சௌம்யாவிடம் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...