பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

லாரி திருட்டு: இளைஞா் கைது

புதுச்சேரி அருகே டிப்பா் லாரியை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:48 pm

DIN

புதுச்சேரி அருகே டிப்பா் லாரியை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூா் ஆரியபாளையத்தைச் சோ்ந்தவா் மதியழகன் (52). லாரி உரிமையாளரான இவா் மணல், ஜல்லி விற்பனைத் தொழில் செய்து வருகிறாா்.

இவா் தனது டிப்பா் லாரியை வீட்டின் எதிரே நிறுத்துவது வழக்கம். லாரியை புதன்கிழமை இரவு நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்ற அவா் நள்ளிரவில் வந்து பாா்த்த போது, லாரியை காணவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், மேட்டுபாளையம் அருகே மதியழகனின் லாரி நிற்பது தெரிய வந்தது. போலீஸாா் அங்கு சென்று, லாரியை திருடிய வில்லியனூா் கனுவாபேட்டை புதுநகா் பகுதியைச் சோ்ந்த கலை (எ) விஜயகுமாரை (20) கைது செய்து லாரியை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.